கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் சாலையில் தொழிற்பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. இந்த தொழில் பயிற்சி நிலையத்தில் சேர்ந்து தொழில் பிரிவுகளில் பயிற்சி நிறைவு செய்பவர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் பயிற்சி செய்பவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, சைக்கிள், சீருடை, காலணி, பாடப்புத்தகங்கள், வரைபட கருவிகள், மற்றும் இலவச பஸ் பாஸ் ஆகிய வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து பயிற்சி முடியும் போது வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஓராண்டு தொழில் பிரிவுகளுக்கு புட் புரோடஷன், பிபிஓ, வெல்டர், இன்டீரியர் டிசைன் அன்ட் டெக்கரேஷன் ஷீட் மெட்டல் வொக்கர் மற்றும் ஆறுமாத கூறிய பயிற்சிக்கு புரோன் பைலட் ஆகிய காலியான இடங்களை பூர்த்தி செய்வதற்காக வருகின்ற 30ஆம் தேதி வரைநேரடி சேர்க்கை நடைபெற உள்ளது.
இதில் 8 மற்றும் 10 ஆம் வகுப்பு வரை படித்து முடித்து 40 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது என்று கூறப்படுகிறது. மேலும் மாணவர் சேர்க்கை குறித்து கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள 0422-2642041,9442624516,8667408507 மற்றும் 9443171698 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று கோவை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் செல்வராஜன் அறிவித்துள்ளார்.