தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டு வருகிறது.
மறுபக்கம் மக்களைக் கவர அனைத்து கட்சியினரும் மக்களிடம் நேரடி தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழக பாஜக தேர்தல் அறிக்கை வெளியாகி உள்ளது. அதில், பூரண மதுவிலக்கை தமிழகத்தில் அமல்படுத்தபடும். மீனவர்களுக்கு வருடாந்திர உதவித்தொகை ரூ.6000 வழங்கப்படும். 8ம் வகுப்பு, 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் வழங்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.