8-ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முத்தண்ணம்பாளையம் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சரண்சுதன் என்ற மகன் இருந்துள்ளான். இவன் 8-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் சுமதி தனது கணவரை பிரிந்து மகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார். மேலும் சுமதி பகுதிநேர ஆசிரியராகவும், பெட்ரோல் பங்கில் கணக்காளராகவும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சரண்சுதன் தாய் சுமதியிடம் சைக்கிள் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு சுமதி சம்பளம் வந்த பிறகு வாங்கி தருவதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் சரண்சுதன் மாலையும் சைக்கிள் கேட்டு அடம் பிடித்துள்ளார். அதன் பிறகு சுமதி பெட்ரோல் பங்கிற்கு வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் சுமதி இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது சரண் வீட்டில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சுமதி அருகில் இருந்தவர்களின் உதவியுடன் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் சரண் சுதனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.