Categories
உலக செய்திகள்

அடுத்தடுத்து 8 குண்டுகள்…. 185 பேர் பலி…500 பேர் காயம்…..கண்ணீரில் இலங்கை…!!

இலங்கையில் 7 மற்றும் 8 என தொடர்ந்து குண்டுவெடிப்பு சம்பவத்தால் 185_திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்_ பட்டத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் அடுத்தடுத்து 6 இடங்களில் குண்டு வெடித்தது. அதில் கொச்சிக்கடையில் உள்ள அந்தோணியார் ஆலயம், நீர்கொழும்பில் இருக்கும் கட்டுவபிட்டி செபஸ்டியன் தேவாலயம், மட்டகளப்பு பகுதியின் தேவாலயம் அதே போல கொழும்பில் இருக்கும் ஷாங்ரிலா, சினமான் கிராண்ட்,கிங்ஸ்பரி ஆகிய நட்சத்திர ஓட்டல்கள் என  குண்டு வெடித்தது.

3 தேவாலயம், 3 நட்சத்திர ஓட்டல்கள் என அடுத்தடுத்து  6 இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பத்தால் கொழும்பில் பதட்டம் நீடித்த நிலையில் 7_ஆவது மற்றும் 8_ஆவது என   குண்டு வெடித்து பெரும் பதட்டத்தை எற்படுத்தியுள்ளது. இலங்கையின்  தெஹிவளை என்ற இடத்தில் உள்ள ஹோட்டலில் நடைபெற்ற இந்த 7_ஆவது குண்டு வெடிப்பும் , தெமட்டகொடாவில் குடியிருப்பு பகுதியில் 8வது குண்டுவெடிப்பும் நிகழ்துள்ளது.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் இதுவரை 185 பேருக்கு மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் , 500க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது. மேலும் இன்று இரவு முதல் இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதோடு வதந்தி பரவாமல் இருக்க சமூகவலைத்தளம் முடக்கப்பட்டுள்ளது. மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்றும் , பொது இடங்களில் ஓன்று கூட வேண்டாமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |