சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டியில் சேவாக் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐந்து நாடுகளில் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் சச்சின் தலைமையிலான இந்தியா லெஜெண்ட் அணியும் , லாரா தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் அணியும் மோதியது. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 150 ரன் எடுத்தது. அதிகபட்சகமாக சந்ரபால் 61 ரன் எடுத்தார். இந்தியா தரப்பில் சாகீர் , படேல் , ஓஜா தலா 2 விக்கெட் வீழ்த்தினார்
151 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய லெஜெண்ட் அணியின் தொடக்க ஜோடியான சச்சின் , சேவாக் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 50 ரன் பார்ட்னர் ஷிப் குவித்து அசத்தினர். அணியின் ஸ்கோர் 83ஆக இருந்த போது சச்சின் டெண்டுல்கர் 29 பந்துகளில் 7 பவுண்டரியுடன் 36 ரன் எடுத்து பென் பந்தில் ஆட்டமிழந்தார். சச்சின் டெண்டுல்கர் அரைசதம் அடிக்காததால் இந்திய லெஜெண்ட் அணி ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
பின்னர் 2ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய கைப் – வீரேந்திர சேவாக் ஜோடி இந்திய லெஜெண்ட் அணிக்கு பொறுமையாக ரன் குவித்து வருகின்றது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சேவாக் அரைசதம் அடித்து அசத்தினார். இந்திய லெஜெண்ட் அணி 16.1 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 126 ரன் எடுத்துள்ளது சேவாக் 61 ரன்னுடனும் , கைப் 14 ரன்னுடனும் ஆடி வருகின்றனர்.