பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியை சுற்றி நின்று அவரின் பேரப்பிள்ளைகள் எட்டு பேரும் இறுதி மரியாதை செலுத்தியுள்ளனர்.
பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத் கடந்த எட்டாம் தேதி அன்று தன் 96 வயதில் மரணமடைந்தார். அவரின் உடல் லண்டனில் இருக்கும் வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் அரச மரியாதை மற்றும் கிரீடத்துடன் வைக்கப்பட்டிருக்கிறது. மகாராணியரின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பிரிட்டனுக்கு சென்றிருக்கிறார்கள்.
The Queen’s grandchildren hold a Vigil beside Her Majesty’s coffin at Westminster Hall. pic.twitter.com/lChZW6OdIP
— The Royal Family (@RoyalFamily) September 17, 2022
மகாராணியாரின் பேரப்பிள்ளைகள், அவரின் உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியை சுற்றி நின்று கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். அதில் அரசர் சார்லஸின் மகன்கள் இளவரசர்கள் வில்லியம், ஹாரி உட்பட 8 பேரப்பிள்ளைகளும் அஞ்சலி செலுத்திய புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளது.