Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திடீரென பற்றி எறிந்த தீ…. விபத்தில் பறிபோன உயிர்கள்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிறுவன் உள்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மும்முனை சந்திப்பு சாலையில் பட்டாசு, மளிகை கடை ஆகிய 2 கடையையும் செல்வகணபதி என்பவர் நடத்தி வருகிறார். இவர் பாரதீய ஜனதா கட்சியின் மாவட்டச் செயலாளராகவும் இருந்து வருகின்றார். இந்நிலையில் செல்வகணபதிக்கு சொந்தமுடைய பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிறுவன் உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து கடை உரிமையாளர் உள்பட 10-க்கும் அதிகமானவர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து கிராம நிர்வாக அலுவலர் வரதராஜன் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை முடிந்த செல்வகணபதி தற்போது வீடு திரும்பியதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அவர் வீட்டிற்கு விரைந்து சென்று செல்வகணபதி கைது செய்துள்ளனர்.

Categories

Tech |