திருச்சி துறையூரை அடுத்துள்ள எஸ்.எஸ் புதூரில் டயர் வெடித்த மினிவேன் கிணற்றில் கவிழ்ந்ததில் பலியானோர் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரணம் அறிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்துள்ள எஸ்.எஸ் புதூரில் சரக்கு வாகனத்தில் 22 பேர் பயணம் செய்தனர். கறி விருந்து நிகழ்ச்சிக்காக அந்த சரக்கு ஆட்டோவில் அவர்கள் சென்று கொண்டிருந்த போது வழியில் வண்டியின் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகே இருந்த நீர் இல்லாத கிணற்றில் பாய்ந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதையடுத்து சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து வந்து கிணற்றில் சிக்கியவர்களை மீட்டனர்.
இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 09 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மினிவேன் கவிழ்ந்து பலியான 8 பேர் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் நிதியுதவி அறிவித்துள்ளார். அதில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் , படுகாயம் அடைந்தவர்களுக்கு படுகாயம் அடைந்தவர்கள் தலா 50,000 , சிறு காயம் அடைந்தவர்களுக்கு தலா 25 ஆயிரமும் வழங்கப்படுமென்று முதல்வர் அறிவித்துள்ளார்.