ஜெர்மனியில் மாஸ்க் அணியாமல் வெளியில் வருபவர்களுக்கு 8 லட்சம் அபராதம் என அரசு தெரிவித்துள்ளது
சீனாவின் தொடங்கிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதும் அச்சுறுத்தி வரும் நிலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவதை தடுக்க பொதுமக்கள் வெளியில் வரும்பொழுது மாஸ்க் அணிவது கட்டாயம் என வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இந்த விதிகளை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் ஜெர்மனியில் ஊரடங்கு பல கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்பட்டுள்ளது. விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் அடிப்படையில் பொது இடங்களுக்கு மக்கள் வரும்பொழுது மாஸ்க் அணிந்து வர வேண்டியது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
அணியாத குற்றத்திற்கு அபராதம் விதிக்கும் வகையில் சட்டம் திருத்தப்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்து, நீண்ட தூர ரயில் பயணம், பொது இடங்கள் மற்றும் வணிகச் சந்தைகள் போன்ற இடத்திற்கு மாஸ்க் அணியாமல் சென்றால் அல்லது கடை ஊழியர்கள் மாஸ்க் அணியாமல் வியாபாரம் செய்து வந்தார். இந்திய ரூபாய் மதிப்பில் 8 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது. விதிமுறைகளை மீறி ஒரு முறை அபராதம் செலுத்தியவர் மீண்டும் அரசிடம் சிக்கினால் பின்னர் கடுமையான தண்டனை கொடுக்கப்படும் என எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.