Categories
உலக செய்திகள்

8 மாதம் திக் திக்… கொரோனாவுக்கு முடிவுரை…. தடுப்பூசி கண்டுபிடித்த ரஷ்யா….!!

உலக நாடுகளில் முதன் முறையாக கொரோனா தடுப்பு ஊசியை ரஷ்யா கண்டறிந்து சாதனை படைத்துள்ளது.

உலக நாடுகள் முழுவதும் கொரோனா என்ற பெயரைக் கேட்டாலே அஞ்சி நடுங்குகின்றன. சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த 8 மாதங்களாக உலக நாடுகளை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் கொரோனாவிற்கு பாதிப்படைபவர்களின் எண்ணிக்கையும், அதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இந்த வாரத்தின் இறுதிக்குள் உலக அளவில் கொரோனா பாதிப்பு 2 கோடியை எட்டிவிடும் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. ஆனால் கொரோனா பாதிப்பு நேற்று இரண்டு கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கையும் 7 லட்சத்து 50 ஆயிரம் எட்டியுள்ளது. இந்த தகவலை உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானோம் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் கொரோனாவிற்கான தடுப்பூசி பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது.தனது சொந்த மக்களுக்கு தடுப்பு ஊசியை செலுத்தி அதிபர் புதின் பரிசோதனையை தொடங்கி வைத்திருக்கிறார். கொரோனாவுக்கான ஒரு சிறந்த தடுப்பூசியை ரஷ்யா கண்டறிந்துள்ளதாக அந்நாட்டின் அதிபர் பெருமிதம் கூறியுள்ளார். மேலும் கொரோனா தடுப்பூசியை பதிவு செய்த முதல் நாடு ரஷ்யா என்று பெருமை கூறியுள்ளது. உலகில் முதல் முறையாக கொரோனா தடுப்பூசியை ரஷ்யா கண்டறிந்துள்ளது. அதிபர் புதின் மூலமாக மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு அந்த சோதனை வெற்றி கண்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |