காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை உள்ளிட்ட 8 மாவட்ட ஆட்சியாளர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
18 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் தொடர்பாக தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள செய்தியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆகவும், அந்த மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி காஞ்சிபுரம் ஆட்சியர் ஆகவும் நியமிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி கரூர் ஆட்சியராக, ஊரக மறுசீரமைப்பு திட்ட தலைமைச் செயல் அதிகாரி கார்த்திகா தர்மபுரி மாவட்ட ஆட்சியராக பணியமர்த்தப்பட்டனர்.
கரூர் ஆட்சியர் அன்பழகன் மதுரை ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூர் ஆட்சியர் சாந்தா திருவாரூர் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பட்டு வளர்ப்பு துறை இயக்குனர் வெங்கட பிரியா பெரம்பலூர் ஆட்சியர் ஆகவும் பட்டு வளர்ப்பு துறை இயக்குனராக மதுரை ஆட்சியர் வினையும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நிதித்துறை இணை செயலர் அரவிந்த் கன்னியாகுமரி ஆட்சியர் ஆகவும் திருவாரூர் ஆட்சியர் ஆனந்த் வேளாண் இணை இயக்குனராகவும் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் சங்கர் பதிவுத்துறை ஐஜியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை திட்ட இணை செயலாளர் சிவஞானம் சுகாதாரத்துறை திட்ட இயக்குநராகவும் ஆட்சியர் தேர்வு வாரிய தலைவராக நிர்மல்குமார் சுகாதாரத்துறை இணை செயலாளராக அஜய் யாதவ் கூடுதல் தலைமைச் செயலாளர் அபூர்வ வர்மா விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.