Categories
மாநில செய்திகள்

8 மாதங்களில் 8வது முறை சிலிண்டர் விலை உயர்வு…. அன்புமணி ராமதாஸ் கண்டனம்….!!!!

தமிழகத்தில் இந்திய  எண்ணை நிறுவனங்கள் சமீபத்தில் ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு விலையை உயர்த்தி இருந்தது. ஆனால் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு விலை உயர்த்தபடாமல்  அதை விலை ரூ.900 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயுவின் விலையை மீண்டும் உயர்த்தியுள்ளது. அதன்படி  சமையல் எரிவாயு விலை ரூ.15 ஆக உயர்த்தி ரூ.915 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இதனால் நடுத்தர மக்கள் சிலிண்டர் வாங்கும் நிலை குறைந்து வருகிறது. இதுகுறித்து பா.ம.க. எம்.பி.அன்புமணி இராமதாஸ் டவெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலையை தொடர்ந்து உயர்த்துவதால் நடுத்தர மக்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எண்ணெய் நிறுவனம் தொடர்ந்து சிலிண்டர்களின் விலையை உயர்த்தி தற்போது 8 வது முறை விலையை உயர்த்தியுள்ளது. இந்த சிலிண்டர்களின் விலை உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |