Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

உண்மையை மறைத்த குடும்பத்தினர்… திருமணம் நடந்த பின்… 8 மாதங்களில் புதுப்பெண் துடி துடித்து பலியான சோகம்..!!

திருமணமான 8 மாதங்களில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் இருக்கும் எடமலைப்பட்டி அடுத்த புதூர் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு. ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவருக்கு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை  சேர்ந்த நீலவேணி என்ற பெண்ணை கடந்த வருடம் நவம்பர் மாதம் திருமணம் செய்துவைத்தனர். திருமணத்திற்குப் பிறகு மாமனார், மாமியார், கணவர் என நீலவேணி கூட்டுக்குடும்பமாக மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை திடீரென நீலவேணியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தபோது அவரது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்ட சம்பவம் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அவரை காப்பாற்ற முயன்றும் பரிதாபமாக மரணமடைந்தார்.

இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், விஷ்ணு ஏற்கனவே வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தது நீலவேணி தெரியவந்துள்ளது. முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவதாக நீலவேணியை திருமணம் செய்ததால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.  நேற்று காலையும் தகராறு ஏற்பட மிகுந்த வேதனை அடைந்த நீலவேணி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து விட்டார் என்பது தெரியவந்துள்ளது. திருமணம் முடிந்த எட்டு மாதங்களிலேயே பெண் தற்கொலை செய்து கொண்டதால் விஷ்ணு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |