Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

8 பக்கத்திற்கு… ” மனைவி மற்றும் மாமியாரே காரணம்”… தொழிலாளியின் உருக்கமான கடிதம்..!!

என் மரணத்திற்கு காரணம் மனைவி மாமியார் என உருக்கமான கடிதத்தை எழுதி விட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே வடக்கு தாமரைகுளம் ஆசாரி தெருவை சேர்ந்த நாகராஜன் வெல்டிங் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி கவிதா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர் நாகராஜனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் கடும் வாக்குவாதம் நிலவியதால் கவிதா கோபித்துக்கொண்டு நாகர்கோயிலில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். செல்லும்போது மகன்களையும் அழைத்து சென்றுவிட்டார்.

இதனால் நாகராஜன் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். சம்பவ தினத்தன்று நாகராஜன் வீட்டு கதவு நீண்ட நேரமாகியும் திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் நேற்று மாலை ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தனர். அப்போது அவர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். போலீசாருக்கு தகவல் அனுப்பப்படும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் அவர் தூக்கில் தொங்கிய அறையில் ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டது. அது 8 பக்க கடிதம் இருந்தது. என் சாவுக்கு காரணம் மனைவி, மாமியார் மற்றும் உறவினர்கள் என்று குறிப்பிட்டதோடு அவருடைய பேச்சைக் கேட்டு என் மனைவி செயல்பட்டதால் எங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து நாகராஜன் சகோதரர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |