68 வயதுடைய மூதாட்டியிடம் 8 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் நேருஜி நகர் 4-வது தெருவில் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவர் இரும்பு தொழிற்சாலையில் வேலை பார்த்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு வச்சலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருக்கும் போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திடீரென வச்சலா அணிந்திருந்த 8 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த வச்சலா திருடன் என கத்தியுள்ளார். அதன்பின் அருகிலிருந்தவர்கள் வருவதற்குள் மர்ம நபர்கள் வேகமாக தப்பி சென்றுள்ளனர். இது தொடர்பாக வச்சலா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.