Categories
அரசியல் மாநில செய்திகள்

8 வழிச்சாலை போராளியை வெற்றி பெறச் செய்த மக்கள்…!

8 வழிச்சாலையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடையே கருத்து பரப்புரை மேற்கொண்டவர்களை அப்பகுதி மக்கள் வார்டு உறுப்பினர்களாக வெற்றி பெறச்செய்த நிகழ்வு அரசியில்வாதிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குப்பனூர் ஊராட்சியில் வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு எட்டு வழிச்சாலை எதிர்ப்பு குழுவின் பிரதிநிதிகளான செல்வராஜ், ராமசாமி ஆகியோர் போட்டியிட்டனர். இவ்விருவரும் வார்டு உறுப்பினர்களாக வெற்றி பெற்றுள்ளனர்.

இதுகுறித்து பேசிய செல்வராஜ், ‘எட்டு வழிச்சாலையினால் ஏற்படும் பாதிப்புகளை குப்பனூர் தொகுதி விவசாயிகளிடம் நாங்கள் தொடர்ந்து எடுத்துக்கூறி வந்தோம். அதுனுடைய விளைவாக அந்த சாலைப் பணி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், எட்டுவழிசாலை எதிர்ப்பு குறித்து தொடர்ந்து பொதுமக்களிடம் கருத்துகளைக் கூறி வந்ததால் எங்களை வார்டு கவுன்சிலராகப் போட்டியிட கிராம மக்கள் ஆர்வமுடன் ஊக்கப்படுத்தினர்.

தற்போது எங்களுக்கு வெற்றியையும் குப்பனூர் மக்கள் தந்துள்ளனர். வருங்காலங்களில் குப்பனூர் ஊராட்சிப் பகுதியில் உள்ள பிரச்னைகளை தீர்த்து வைப்போம்’ என்றார். இதேபோன்று எட்டுவழிச்சாலைக்கு எதிராக மக்களிடம் கருத்துப்பரப்புரை மேற்கொண்ட தமிழரசன் என்பவர் குட்டப்பட்டி ஊராட்சியில் வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர்களின் வெற்றி அரசியில்வாதிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Categories

Tech |