பணம் வைத்து சூதாடிய கொண்டிருந்த 8 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள கோமதிபுரம் பகுதியில் தனியார் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் விடுதியில் உள்ள ஒரு அறையில் 8 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்ததை காவல்துறையினர் கண்டுள்ளனர். அதன்பின் காவல்துறையினர் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த 6 செல்போன்கள் மற்றும் 25580 ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.