Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் நடந்த சம்பவம்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…. நாகையில் பரபரப்பு….!!

டாஸ்மார்க் கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பாலக்குறிச்சி பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த கடை முழு ஊரடங்கு காரணமாக கடந்த 10ஆம் தேதி முதல் மூடப்பட்டிருக்கிறது. இந்தக் கடையில் மைக்கேல் ராஜ், அந்தோணி என்பவர்கள் காவலாளியாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் காவல்பணியில் இருக்கும் போது டாஸ்மாக் கடையின் அருகில் உள்ள கீற்றுக் கொட்டகையில் படுத்து தூங்குவது வழக்கம். அவ்வாறு கடந்த 14ஆம் தேதி காவல் பணிக்கு வந்த இருவரும் கொட்டகைக்குள் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது நள்ளிரவு 1 மணியளவில் ஒரு கும்பல் அந்த காவலாளிகளை கத்தியை காட்டி மிரட்டி அவர்களை கயிறால் கட்டிப்போட்டு விட்டு கடையில் உள்ள 73 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்களை கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் கொள்ளை நடந்த டாஸ்மாக் கடைக்கு வந்து பார்வையிட்டு சென்றுள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர்  வழக்குபதிவு செய்து 2 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்த தனிப்படையினர்  வேளாங்கண்ணி செந்தூர் பாலம் அருகில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த சமயத்தில் நாகை நோக்கி ஒரு மோட்டார் சைக்கிளில் மூன்று பேர் வந்து கொண்டிருந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை நிறுத்தி விசாரணை நடத்தியபோது மூன்று பேரும்  முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி உள்ளனர். இந்த விசாரணையில் அவர்கள் ஹரிஹரன், குருபாலன், தனராஜ் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் இவர்கள் டாஸ்மார்க் கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. அதன்பின் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கொள்ளையில் தொடர்புடைய ரதீஷ் குமார், கலையரசன், சதீஷ், தமிழ்மாறன், பிரவீன் ஆகிய 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த 3 மோட்டார் சைக்கிள்கள், 45 மது பாட்டில்கள், ரூபாய் 10000 பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |