Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நூதன முறையில் திருட்டு…. அதிர்ச்சியடைந்த மூதாட்டி….. போலீஸ் வலைவீச்சு….!!

நூதன முறையில் மூதாட்டியிடம் நகையை பறித்த வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் பகுதியில் மூதாட்டியான ஆதிலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் 26 – ஆம் தேதியன்று நடை பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் தங்கள் அரசு உயர் அதிகாரிகள் என்று மூதாட்டியிடம் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு அந்த மர்ம நபர்கள் மூதாட்டியிடம் வழிப்பறி சம்பவம் இப்பகுதியில் அடிக்கடி நடந்து வருகிறது நீங்கள் நகை அணிந்து சாலையில் வரலாமா ? என்று கூறியுள்ளனர்.

இதனை அடுத்து 2 மர்ம நபர்களும் மூதாட்டியிடம் பரிசை கொடுத்து இதில் நீங்கள் நகையை பத்திரமாக வைத்திருங்கள் என்று கூறியுள்ளனர். அதன் பின்னர் மூதாட்டி தன்னுடைய தங்க நகைகளை கழற்றி பர்சில் வைத்து சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். இதனை தொடர்ந்து அதை நபர்கள் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்று மூதாட்டி வைத்திருந்த பரிசை பறித்து விட்டு தப்பி சென்றனர். இது குறித்து மூதாட்டி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நூதன முறையில் நகையை பறித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |