தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவன் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இன்று தன்னுடைய 73 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் இவருக்கு அரசியல் தலைவர்கள் ரசிகர்கள் மற்றும் திரைப்படங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ரஜினியை பற்றி கூறியதாவது, 37 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண மனிதன் என் முன்னால் ரோஸ் கலர் பனியன் கருப்பு நிற பேண்ட் அணிந்தபடி ஸ்டைலாக ரஜினி நடந்து வருகிறார். கலைப்புலி தாணு யார் என கேட்டு என்னை கட்டிப்பிடித்து மகிழ்ச்சியோடு வாழ்த்துக்களை பரிமாறினார்.
அந்த நிகழ்வு இன்றும் என் கண்ணில் பசுமையாக தெரிகிறது. வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரிய கூடாது என உதவி செய்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினி. மேலும் அருணாச்சலம் படத்தின் மூலம் அவர் 8 தயாரிப்பாளர்களை உருவாக்கினார்.
அந்த வகையில், ரஜினிக்கு நண்பராக இருக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது இறைவன் செயல். மேலும், ‘இந்த வையம் தலைக்கு அவர் வாழ்வாங்கு வாழ வேண்டும் என இறைவனை வணங்குகிறேன்’ எனக்கு கூறியுள்ளார்.