கொரோனா ஊரடங்கு காரணமாக பயணிகள் வரத்து குறைவாக இருப்பதால் 8 சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் பேருந்து சேவை ரயில்கள் போன்றவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் ரயில்களில் பயணிகளின் வரத்து மிகக்குறைவாக உள்ளது. இதன் காரணமாக 8 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரல்- ஆலப்புழா, மங்களூர்- திருவனந்தபுரம், எர்ணாகுளம்- காரைக்கால், மதுரை- புனலூர் ஆகிய ரயில்கள் இன்று முதல் மே 31 வரையும், ஆலப்புழா- சென்ட்ரல், திருவனந்தபுரம்- மங்களூர், காரைக்கால்- எர்ணாகுளம், புனலூர்- மதுரை ரயில்கள் ஜூன் 1 வரையும் ரத்து செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.