இந்திய ரயில்வே துறையின் 3115 காலி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. எலக்ட்ரீசியன், ஃபிட்டர், வெல்டர், வயர் மேன், பெயிண்டர் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக பிரிவுகளில் தொழில் பழகுநருக்கான அறிவிப்பு இது. கிழக்கு மத்திய ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின்படி எந்த மாநிலத்தையும் பிறப்பிடமாக கொண்டவர்களும் இந்தியர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு இணைய வழியில் விண்ணப்பம் செய்யலாம். இதற்கு விண்ணப்பம் செய்ய கடைசி நாள் வருகின்ற 29ஆம் தேதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி பணியிடங்கள்: 3115.
கல்வி தொகுதி: 50% மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி.
வயதுவரம்பு: 29.10.2022 அன்று 15 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். 24 வயது பூர்த்தி அடையாதவராகவும் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு வழக்கமான நடைமுறைகள் பின்பற்றப்படும்.
தெரிவு முறை: பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ கல்வியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் உத்தேச இறுதிப்பட்டியில் தயாரிக்கப்படும். எழுத்து, வாய்மொழி போன்ற எந்தவித தேர்வும் நடத்தப்படாது.
மேலும் தொழில் பயிற்சிக்கான தேசிய மற்றும் மாநில கவுன்சில்களில் இருந்து தொடர்புடைய வர்த்தகத்தில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். Welder, Sheet Metal Worker, Lineman, Wireman, Carpenter, Painter தொடர்புடைய வர்த்தகத்தில் சான்றிதழ் பெற்றவர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதுமானது. அதனைத் தொடர்ந்து www.rrecer.com என்ற இணைய பக்கத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். சாதி சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு போட்டோ, கையொப்பம், 8, 10ஆம் வகுப்பு கல்வி சான்றிதழ் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். இத்தகைய விண்ணப்பதாரர்களுக்கு ரயில்வே பயிற்சி மட்டுமே அளித்து வந்த போதிலும் ஆட்சேர்ப்பு நடைபெறும் முதல் நிலைக்கான அறிவிக்கப்பட்ட காலியிடங்களில் 20% இடங்களை அப்ரெண்டிஸ்களுக்காக இந்திய ரயில்வே ஒதுக்கீடு செய்து வருகிறது. எனவே இந்த பயிற்சி முடித்தவர்கள் நிரந்தர பணியில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.