8 வருடத்திற்கு முன் நடிகை சாய் பல்லவி சல்சா நடனமாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது .
‘பிரேமம்’ என்ற மலையாளத் திரைப்படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை சாய் பல்லவி . இவர் தமிழில் தியா, மாரி 2 ,என்.ஜி.கே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் . தற்போது இவர் தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் . இந்நிலையில் 8 வருடத்திற்கு முன் நடிகை சாய் பல்லவி சல்சா நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .
திரைப்படங்களில் கவர்ச்சி இல்லாமல் நடித்து வரும் சாய் பல்லவி இந்த நடன வீடியோவில் கவர்ச்சி கடலில் மூழ்கி பம்பரம்போல் சுழன்று ஆடியுள்ளார் . இவர் அடிப்படையில் ஒரு மருத்துவராக இருந்தாலும் சினிமா மீது இருந்த ஆசையால் நடிக்க வந்தார் . மேலும் நடிகை சாய் பல்லவி நடிகை ஆவதற்கு முன் பல நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .