அமெரிக்காவில் பால் கொண்டு சென்ற லாரி 7 வாகனங்கள் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டதில் 4 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள அரிசோனா என்ற மாகாணத்தில் இருக்கும் பீனிக்ஸ் என்ற நகரத்தில் லாரி ஒன்று சாலையில் பால் கொண்டு சென்றுள்ளது. அப்போது அதிகமாக போக்குவரத்து நெரிசல் இருந்துள்ளது. இந்நிலையில் அந்த லாரி, திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, அங்கு நின்ற வாகனங்களின் மீது மோதியுள்ளது.
இதனால் 8 வாகனங்கள் ஒன்றின் மீது ஒன்றாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் லாரி முழுவதும் மொத்தமாக தீப்பிடித்து எரிந்துவிட்டது. இதில் பல பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதில் பலத்த காயமடைந்த நான்கு நபர்கள் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.