கர்நாடகாவை அடுத்த மங்களூருவில் 8 வயது சிறுவனை கடத்தி 17 லட்சம் கேட்டு மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூரு அடுத்த உஜிரே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுவனை காரில் கடத்தி சென்ற அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள் குழந்தையை உயிருடன் விடுவிக்க வேண்டும் என்கிறால் 17 கோடி ரூபாயை பிட்காயின் ஆக செலுத்துமாறு பெற்றோருக்கு வாட்ஸ்அப் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர். விளையாட போன குழந்தை தனது தாத்தாவுடன் வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது இந்த கடத்தல் சம்பவம் அரங்கேறியுள்ளது.
இது தொடர்பாக போலீசார் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. குழந்தையை காரில் கடத்தி அவர்கள் ஏன் பிட்காயினில் பணம் செலுத்த கேட்கின்றனர் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். குழந்தை இருக்குமிடம் தெரியாததால் குழந்தை உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம் அதிகரித்துள்ளது.