Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

8 வயது சிறுமி…. சூடு வைத்து… பாலியல் தொந்தரவு…. தாயின் 2வது கணவர் கைது…!!

திருச்சியில் 8 வயது  சிறுமிக்கு தாயின் 2 வது  கணவர் சூடு வைத்து பாலியல் தொந்தரவு  அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சைல்டு லைன் இயக்குனர் முரளிதரனை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட திருச்சியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின்  தலைமையாசிரியர் தங்களது பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமி ஒருவருக்கு அவரது தந்தை சூடு வைத்து சித்திரவதை செய்வதாகவும் பாலியல் தொந்தரவு அளிப்பதாகவும்  தெரிவித்தனர். இதையடுத்து அதிர்ந்து போன அவர் உடனடியாக திருச்சியில் உள்ள பள்ளிக்கு விரைந்து சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினார்.

அதில், சூடு வைத்ததற்கான அடையாளம் இருந்தன. இதையடுத்து ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சைல்டு லைன் அதிகாரி புகார் அளித்ததன் பேரில்  மாணவியின் வீட்டிற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் தாயிடம் விசாரணை நடத்தியதில், எனது மகள் தனது முதல் கணவருக்கு பிறந்தவள் என்றும், அவர் இறந்துவிட்டதால் கூலி தொழிலாளியான சாமிநாதன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் சாமிநாதன் தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்தது உண்மைதான் இதனை வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் அவர் தெரிவித்தார். இதனை அடுத்து இரண்டாவது கணவரான சாமிநாதன் மீது ஸ்ரீரங்கம் மகளிர் காவல் துறையினர்  போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அதன்பின் அவரை சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |