கொலம்பியாவில் பிரபல பாப் பாடகிக்கு வரி ஏய்ப்பு புகாரில் 8 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலம்பியாவில் வசிக்கும் பிரபலமான பாப் பாடகியான 45 வயதுடைய ஷகிரா, கடந்த 2012-ஆம் வருடத்திலிருந்து 2014-ஆம் வருடம் வரை ஸ்பெயினில் இருந்திருக்கிறார். அந்த சமயத்தில் சுமார் 116 கோடி ரூபாய் வருமானத்துக்கான வரியை அவர் செலுத்தவில்லை. எனவே, வழக்கறிஞர்கள் ஷகிராவிற்கு நோட்டீஸ் அனுப்பினர்.
அதில், தன் தவறை ஒப்புக்கொண்டு வரி செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இதனை மறுத்த ஷகிரா, தான் அப்போது ஸ்பெயின் நாட்டில் இல்லை எனவும், தனது காதலன் பார்சிலோனா கால்பந்து வீரர் ஜெரார்டு பிக்குடன் பஹாமாஸ் நாட்டில் இருந்தேன் எனவும் கூறினார்.
இதனால், இந்த பிரச்சனை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து ஸ்பெயின் வழக்கறிஞர்கள் அமைப்பு தெரிவித்ததாவது, பாடகி ஷகிரா, 2011-ஆம் வருடத்தில் ஸ்பெயினில் வசித்தார். பஹாமாஸில் அவருக்கு சொந்த வீடு உள்ளது. வருமான வரி வழக்கிற்கான மனுவை அவர் நிராகரித்து விட்டார்.
எனவே, அவர் மீது இருக்கும் குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு 8 வருடங்கள் சிறை தண்டனையும், வரி ஏய்ப்புக்காக 150 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது.