ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 வருடங்களாக காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள நெடுங்குளம் கிராமத்தில் வசித்து வரும் ஜான் என்பவர் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் ஐவரும் அதே பகுதியில் வசிக்கும் குருதேவி என்ற பெண்ணும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர்கள் தடை விதித்ததால் அவர்கள் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து திருமணஜோடி முதுகுளத்தூர் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி 2 பேரிடமும் எழுத்துப்பூர்வமாக சம்மதத்தை எழுதி வாங்கிக்கொண்டு அவர்களை போலீஸ் பாதுகாப்புடன் பெற்றோர் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.