ஈரோடு மாவட்டத்தில் உள்ள வாணிகவுண்டன்பாளையம் பகுதியில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி உள்ளார். இவருக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் வீட்டிற்கு எதிரே இருக்கும் 80 அடி ஆழ கிணற்றுக்குள் சரஸ்வதி திடீரென குதித்துவிட்டார். தண்ணீர் இல்லாமல் 1 அடிக்கு சேரும், சகதியுமாக இருந்த கிணற்றில் விடிய விடிய சரஸ்வதி உட்கார்ந்திருந்தார். நேற்று காலை கிணற்றுக்குள் இருந்து முனகல் சத்தம் கேட்டதால் அந்த வழியாக சென்ற பச்சையப்பன் என்பவர் எட்டி பார்த்துள்ளார்.
அப்போது சரஸ்வதி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த பச்சையப்பன் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி சரஸ்வதியை மேலே கொண்டு வந்தனர். அவரது கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பின்னர் சரஸ்வதியை பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.