Categories
உலக செய்திகள்

80 ஆயிரம் பேர் படுகொலை…. பிரான்சுக்கு இதில் பொறுப்பு உள்ளது…. அறிக்கை வெளியிட்ட ஆய்வுக் குழு…..!!

ருவாண்டா நாட்டில் நடந்த இனப்படுகொலைக்கு பிரான்சுக்கு முழு பொறுப்பு இருப்பதாக  ஆய்வுக் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

ருவாண்டா நாட்டில் கடந்த 1994 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி ஹுட்டு இனத்தைச் சேர்ந்த Hybyarimana புருண்டி அதிபர் cyprien Ntaryamira என்பவரும் விமானத்தில் பயணிக்கும் போது ஏவுகணை  தாக்கியதால் இருவரும் உயிரிழந்தனர். இவர்களின் உயிரிழப்புக்கு காரணம் சிறுபான்மையினரான துட்சி இனத்தை சேர்ந்தவர்கள் என்று ஹுட்டு இனத்தைச் சேர்ந்த புரட்சி அமைப்பு ஒன்று கூறியது. இதனைத் தொடர்ந்து இந்த அமைப்பு துட்சி இனத்தை சேர்ந்த சுமார் 80 ஆயிரம் பேரை படுகொலை செய்தது .

அந்த சமயத்தில் நாட்டின் அனைத்துப் பக்கங்களிலும் கலவரம் வெடித்து திரும்பும் திசையெல்லாம் மனித தலைகள் கிடந்தன. இந்த கலவரத்தில் பிரான்சுக்கும் சம்பந்தம் இருப்பதாக ருவாண்டா அரசு கூறியுள்ளது. பிரான்ஸ் மீதான  குற்றச்சாட்டு குறித்து ஆராய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் 15 பேர் கொண்ட ஆணையம் ஒன்றை உருவாக்கினார். அந்த ஆணையத்திற்கு Hybyarimana நெருங்கிய உறவில் இருந்த முன்னாள் பிரான்ஸ் அதிபரான Francois Mitterrand’s தகவல்களை ஆணையத்திற்கு வழங்கினார்.

இந்த ஆணையத்தில் இருந்த அனைவரும் எந்த இனத்தையும் சார்ந்தவர்கள் அல்ல அவர்கள் சர்வதேச குற்றவியல் சட்டம் படித்த நிபுணர்கள் ஆவார். இதனைத் தொடர்ந்து அந்த நிபுணர்கள் குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 1994 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22 ஆம் தேதி ருவாண்டாவில் ஐக்கிய நாடுகள் அமைப்பு Operation Turquoise என்ற பிரெஞ்சுப் படைகளை இறக்கியது.பிரெஞ்சு படையானது இனப்படுகொலை செய்யும் கொலைகாரர்களிடமிருந்து சிலரை காப்பாற்றினாலும் மிகவும் தாமதமாக வந்ததால் கொலைகாரர்கள் தப்பித்து விட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதனால் இந்த ருவாண்டா இனப்படுகொலையில் பிரான்சுக்கு பெரிய பொறுப்பு உள்ளது. .

Categories

Tech |