கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை வனப்பகுதியில் ஏராளமான மன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இதனால் நகராட்சி நிர்வாகத்தினர் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு தடை விதித்து சுற்றுலா பயணிகளுக்கும், உள்ளூர் மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நகராட்சி ஆணையாளர் பாலுவின் உத்தரவின் படி துப்புரவு ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் துப்புரவு பணியாளர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனை நடத்தியுள்ளனர்.
அப்போது ஒரு குடோனில் அதிரடியாக சோதனை நடத்தி தின்பண்டங்களை பேக்கிங் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். சுமார் 80 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் உரிமையாளருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.