Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

80 சாக்கு மூட்டைகள்…. 4000 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்தது யார்….? போலீஸ் விசாரணை….!!  

அதிக விலைக்கு விற்பனை செய்ய பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
 

விழுப்புரம் மாவட்டம் கெடார் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் பின்புறத்தில் ரேஷன் அரிசி மூட்டைகள் அடுக்கி  வைக்கப்பட்டிருந்தது. அங்கு வந்து  பார்த்த வருவாய் ஆய்வாளர் லட்சுமிநாராயணன், இதனை பற்றி விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறையினருக்கு  தகவல் தெரிவித்தார்.அந்த தகவல் பேரில் இன்ஸ்பெக்டர் ரேகாமதி தலைமையில்,சப்-இன்ஸ்பெக்டர் கவியரசன்,2 ஏட்டுகள் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை நடத்தினர்.

அந்த  சோதனையில் 50 கிலோ எடை உள்ள 80 சாக்கு மூட்டைகளில் 4 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி இருந்துள்ளது.அதாவது ரேஷன் அரிசியை அந்த ஊரில் யாரோ ஒருவர் அங்குள்ள பொதுமக்களிடம்  குறைந்த விலைக்கு வாங்கி அதனை  வெளியில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கோவில் பின்புறத்தில் பதுக்கி  வைத்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.அவ்வாறு பதுக்கி வைக்கப்பட்ட  அரிசி மூட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதனை தொடர்ந்து  பறிமுதல் செய்த அரிசி மூட்டைகளை விழுப்புரத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக்கழக குடோனில் ஒப்படைத்தனர். ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்தவர்கள்  குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதோடு மட்டுமல்லாமல் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

 

 

.

Categories

Tech |