Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

80 லட்ச ரூபாய் மோசடி…. சாப்ட்வேர் இன்ஜினியர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள சிவ நாயக்கன்பட்டி பகுதியில் சாப்ட்வேர் இன்ஜினியரான தனபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, சேலம் மாவட்டத்தில் உள்ள அஸ்தம்பட்டியில் தனியார் நிறுவனம் நடத்தி வரும் ஒருவர் எனக்கு அறிமுகம் ஆனார். அவர் என்னிடம் நிதி உதவி செய்யுமாறு கேட்டார். அப்போது என்னிடம் பணம் இல்லை என கூறினேன்.

இதனையடுத்து வங்கியில் கடன் பெற்றுக் கொள்ளலாம் என அவர் கூறியதை நம்பி எனது ஆவணங்களை கொடுத்தேன். அதை பயன்படுத்தி பல்வேறு வங்கிகளில் இருந்து 80 லட்சம் வரை கடன் வாங்கி அவர் மோசடி செய்துள்ளார். எனவே மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |