Categories
மாநில செய்திகள்

80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி…. ஒரே நாளில் 500 பேர்….சென்னை மாநகராட்சி தகவல்…!!!

சென்னை தினத்தையொட்டி 12 மாநிலங்களுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் மாநகராட்சி சார்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்கப்பட்டது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்தியில், சென்னை மாநகராட்சி பகுதியில் வசிக்கும் 80 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக 15 வாகனங்கள் தொடங்கப்பட்டன.

இதற்காக 044-2538 4520, 044-46122300 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவவு செய்தால் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்தப்படும். இந்த திட்டம் தொடங்கப்பட்ட முதல் நாளன்று 463 பேருக்கு முதல் தவணைத் தடுப்பூசியும், 37 பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் மொத்தமாக 500 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளனர். மேலும் இதற்கு ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒரு செவிலியர் மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

Categories

Tech |