Categories
சேலம் மாநில செய்திகள்

80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள்…” இந்த தொகுதியில் தான் அதிகம்”… தெரியுமா..?

சேலம் மாவட்டத்தில் 61,745 வாக்காளர்கள் 80வயதிற்கு மேற்பட்டவர்கள் இருக்கின்றனர் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் .

சேலம் மாவட்ட ஆட்சியரான ராமன் சேலம் மாவட்டத்திலுள்ள மொத்தம் 11 சட்டமன்ற தொகுதிகளில் 61 ஆயிரத்து 745 வாக்காளர்கள் 80 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். இதுப்பற்றி அவர் அறிக்கையில் கூறியிருப்பது:-

அடுத்த மாதம் ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் ,பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏதேனும் தேர்தல் விதிமுறைக்கு முரணாக புகாரை தெரிவிக்க 0427-1950, 1800 4257 020  இந்த இரு எண்களில் பொதுமக்கள் தொடர்புகொள்ள  வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சட்டமன்றத் தொகுதிகள்: கெங்கவல்லி, ஆத்தூர் தொகுதி:

கெங்கவல்லி சட்டமன்ற தொகுதியில் 2 , 38. 253 வாக்காளர்களில் 80 வயதுக்கு மேற்பட்டோர் 5,412 பேர், மாற்றுத்திறனாளிகள்2,883 பேர் உள்ளன. அடுத்து ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில்2,53,800 வாக்காளர்களில் 80 வயதுக்கு மேற்பட்டோர் 5,537 பேர் மற்றும்2,747 பேர் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.
இதேபோல் ஏற்காடு சட்டமன்ற தொகுதியில்2,82,656 வாக்காளர்களின், 80 வயதுக்கு மேற்பட்டோர்5,017 பேர் மற்றும்3,145 பேர் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். ஓமலூரில்2,94,712 வாக்காளர்களில், 80 வயதுக்கு மேற்பட்டோர் 6,040 பேர்,3,322 மாற்றுத்திறனாளிகள் உள்ளன.

மேட்டூர் ,எடப்பாடி தொகுதி:

மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் 2,85,767 வாக்காளர்களின் 80 வயதுக்கு மேற்பட்டோர் 6,565 பேர் மற்றும் 2,441 பேர் மாற்றுத்திறனாளி ஆவர். எடப்பாடி சட்டமன்ற தொகுதிகள் 2,84,378 வாக்காளர்களின், 80 வயதுக்கு மேற்பட்டோர் 6,079 பேர் ஆவர். மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 2,429 பேர் உள்ளன. சங்ககிரியில் 2,73,143 வாக்காளர்களின் 80 வயதுக்கு மேற்பட்டோர் 5,945 பேர் மற்றும் 2,116 பேர் மாற்றுத்திறனாளிகள் உள்ளன.

சேலம் தொகுதி:

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள 2,97,985 வாக்காளர்களில், 80 வயதுக்கு மேற்பட்டோர் 6,189 பேரும், 1,456 மாற்றுத்திறனாளியாக வும் உள்ளன. இதேபோல் சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில்2,74,776 வாக்காளர்களின்6,019 பேர் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள்,1,949 பேர் மாற்றுத்திறனாளிகள்.

தெற்கு ,வீரபாண்டி தொகுதி:

சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதியில் 2,59,229 வாக்காளர்களின் 4,217 பெண் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 1,579 பேர் மாற்றுத்திறனாளிகள். வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியில் 2,59,441 வாக்காளர்களின்,4,725 பேர் எண்பது வயதுக்கு மேற்பட்டவர்கள்,1,958 பேர் மாற்றுத்திறனாளிகள்.
இவ்வாறாக சேலத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் 30 லட்சத்து 4 ஆயிரத்து 140   வாக்காளர்கள் உள்ளதாகவும் ,இதில் 61 ஆயிரத்து 745 பேர் 80 வயதுக்கு மேற்பட்டோரும், 26 ஆயிரத்து 25 பேர் மாற்றுத்திறனாளிகள் உள்ளன என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |