Categories
தேசிய செய்திகள்

வீட்டில் யாரும் இல்லாத நேரம்….. 80 வயது பாட்டினு கூட பார்க்காமல்….. உபி-யில் தொடரும் கொடூரம்…..!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் 80 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தினம்தோறும் நாட்டின் ஏதாவது ஒரு மூலையில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அதனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் கரேலா என்ற நகரத்தின் அருகே உள்ள கிராமத்தில் 80 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பிப்ரவரி இரண்டாம் தேதி நடந்துள்ளது. அந்த மூதாட்டியின் பேரன் போலீசில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாதபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |