பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது மேலும் ஐந்து மாதங்களுக்கு இலவச ரேஷன் திட்டத்தை அறிவித்துள்ளார்.
இன்று காணொளி மூலம் நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் மோடி, மேலும் ஐந்து மாதங்களுக்கு ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும். ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில் 5 கிலோ அரிசி அல்லது கோதுமை அத்துடன் ஒரு கிலோ கடலைப் பருப்பு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். இதற்காக 90 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப் படுகிறது. இதன் மூலம் கிட்டத்தட்ட 80 கோடி குடும்பங்கள் பயன் பெறுவார்கள் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
ஏற்கனவே பொது முடக்கம் தொடங்கியதில் இருந்து இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த சமயத்திலேயே 60 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருவரை செலவிடப்பட்டுள்ளது. தற்போது மேலும் 90 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் இந்த இலவச உணவு பொருட்களுக்கு வழங்கும் திட்டத்திற்கு மட்டும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு காரணம் என்னவென்றால் ஜூலை மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை தீபாவளி உட்பட பல பண்டிகைகள் இருக்கும்காரணத்தால் மத்திய அரசு இந்த அறிவிப்பை அறிவித்துள்ளது.