Categories
தேசிய செய்திகள்

ஐசியூ படுக்கைகள் 80 சதவிகிதத்தை கொரோனா நோயாளிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்… அரசு உத்தரவு…!!

டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 80 சதவீத ஐசியு படுக்கைகளை தயார் நிலையில் வைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அங்கு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இட வசதிகள் பற்றாத காரணத்தால் தனியார் மருத்துவமனைகளையும் கொரோனா நோயாளிகளுக்காக தயார்படுத்த வேண்டும் என டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது, டெல்லியில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அவர்களை அனுமதிக்க தேவையான ஐசியூ படுக்கை வசதிகள் போதிய எண்ணிக்கையில் இல்லையென கூறப்படுகிறது.

இதன் காரணமாக, 28 பெரிய தனியார் மருத்துவமனைகளுக்கு டெல்லி அரசு, மொத்தம் இருக்கும் ஐசியூ படுக்கை வசதிகளில் 80 சதவீதத்தை முன்பதிவு செய்து வைக்கும்படி அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |