உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 83,065ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14.46 லட்சம், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3.08 லட்சம் ஆக உள்ளது. அதில் இந்தியாவில் மட்டும் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அனைத்து எதிர்கட்சிகளுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் பேசிய மோடி, முழு உலகமும் தற்போது கரோனாவின் கடுமையான சவாலை எதிர்கொண்டு வருவதாகவும், தற்போதைய இந்த நிலைமை மனிதக்குல வரலாற்றில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ள நிகழ்வாகும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த வைரசின் தாக்கத்தை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் 80% க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக பரிந்துரை செய்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறினார்.
ஆனால், இது தொடர்பாக மக்களின் கருத்துக்களை பெற்று வரும் 11ம் தேதி அனைத்து மாநில தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் கூறியதாக தெரிவித்தார். நாட்டில் ஊரடங்கை உடனடியாக திரும்பப்பெறும் முடிவு இப்போது இல்லை எதிர்க்கட்சிகளுடனான ஆலோசனையில் பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.