செய்தியாளர்களை சந்தித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் ஒரு அரசியல் பிரிவுதான் பாஜக என்றாலும் அது ஒரு அரசியல் இயக்கமாக இருக்கிற காரணத்தினால், வெளிப்படையாக இந்த பாகுபாடுகளை, வெறுப்பு அரசியலை பேச தயங்குகிற இயக்கம். ஆகவே பிஜேபி ஒரு அரசியல் இயக்கம் என்கின்ற பெயரில் பேரணி நடத்துவதில் எனக்கு எந்த மாறுபாடும் இல்லை.
ஆர்.எஸ்.எஸ் இன் அரசியல் பிரிவாக இருக்கின்ற பிஜேபி இருக்கும் பொழுது, பிஜேபி சார்பில் பேரணி நடத்தாமல் ஆர்எஸ்எஸ் சார்பில் பேரணி நடத்த வேண்டிய தேவை எங்கிருந்து வந்தது ? ஆர்எஸ்எஸும் பிஜேபியும் வேறு வேறு அல்ல. ஆர் எஸ் எஸ் பின்னால் இருந்து இயங்குகிற ஒரு இயக்கம். ஆகவே பிஜேபி இந்த 50 வருடங்களில் பேரணி நடத்தி இருந்தால் விசிகவோ மற்ற இயக்கங்களோ எதிர்ப்பு தெரிவித்திருக்க போவதில்லை.
ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவது தான் அச்சத்தை ஏற்படுத்துகிறது, ஆபத்தான ஒரு இயக்கம் என்கின்ற கவலையை உருவாக்குகிறது. இந்திய மண்ணில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு கடந்த முறை இவர்கள் பேரணி நடத்த முயற்சித்த போது, 80க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஒன்று கூடி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
விடுதலை சிறுத்தைகள் மட்டுமல்ல, பல்வேறு அரசியல் கட்சிகள், தேர்தலில் நிக்காத அமைப்புகள் என 8ஒக்கும் மேற்பட்ட அமைப்புகள் சமூக நல்லிணக்க அறப்போரை நடத்தினோம். அந்த பேரணி அப்பொழுது தடைப்பட்டது. தற்பொழுது உயர் நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய ஆர்எஸ்எஸ், பின்வாங்கிக் கொண்டது என தெரிவித்தார்.