எமி ஜாக்சன் தனக்கு 80 வயது ஆனாலும் ஒரு நடிகையாக தொடர்ந்து நடிப்பேன் என தெரிவித்துள்ளார்
தமிழில் மதராசப்பட்டினம் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான வெளிநாட்டு நடிகை எமி ஜாக்சன். இவர் சினிமாவின் 8 வருட வாழ்க்கையில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார். இது குறிப்பு டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு அளித்த பேட்டியில்: என்னை நடிகையாகவும், தனிப்பட்ட முறையிலும் வளர்த்து ஆளாக்கிய இடம் இந்தியா. இந்தியாவில் இருந்த நாட்களை மிகவும் மிஸ் பண்ணுகிறேன். அர்ப்பணிப்புடனும், சுதந்திரமாகவும் வேலை செய்வது எப்படி என கற்றுக் கொண்டேன், மேலும் கற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ளேன். என் தனிப்பட்ட வாழ்க்கையின் வளர்ச்சிக்கும் திரையுலகில் கற்றுக் கொண்டதுதான் உதவியாக உள்ளது. என் மனசாட்சி சொல்வதை கேட்டு நடப்பவள் நான்.
சினிமாவிற்கு வரும் போது எந்தவித அனுபவமும் இல்லை கோலிவுட், பாலிவுட் என நடிப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. இயக்குனர் விஜய் ஒரு குழுவாக இருந்து என்னை வழிநடத்தினார். குடும்பத்தின் முக்கியத்துவம் கருதி சினிமாவிற்கு தற்போது வர இயலவில்லை. ஆனால் ஒரு நடிகையாக 80 வயது ஆனாலும் நடிப்பேன். நல்ல கதைகளுக்காக காத்திருக்கிறேன். என்னுடைய மகன் சிறிது வளர்ந்து என்னுடன் வரவேண்டும். எனது கணவர் ஜார்ஜ், அம்மா எப்போதுமே உதவியாக இருக்கின்றனர். நான் நடிக்கும் போது என் கணவர் மற்றும் குடும்பத்தினர் என்னுடன் இருந்தால் நன்றாக இருக்கும் என எமி ஜாக்சன் கூறியுள்ளார்.