கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா உச்சத்தில் இருந்தபோது சுமார் 3200 செவிலியர்கள் பணி அமர்த்தப்பட்டனர். இவர்களில் 2400 பேர் நிரந்தர ஒப்பந்த செவிலியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். மீதமுள்ள 800 பேர் எதிர்கால காலி பணியிடங்களுக்கு ஏற்ப பணி நியமனம் செய்யப்படுவார்கள் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நிதி பற்றாக்குறை காரணமாக இந்த 800 செவிலியர்களும் கடந்த மார்ச் 31-ஆம் தேதியுடன் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இதனை கண்டித்து சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் செவிலியர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட சில செவிலியர்கள் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் 800 செவிலியர்களும் படிப்படியாக பணியமர்த்த படுவார்கள் என கூறியுள்ளார்.