நடிகர்கள் அவர்களுக்கு பிடித்த கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என்று விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதி 800 திரைப்படத்தில் முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க கூடாது என்று பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது. அரசியல் தலைவர்கள் முதல் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். ஆனால் விஜய் சேதுபதி நடிக்கலாம் என்று ஆதரவு தெரிவித்தவர்கள் மிகவும் குறைவு. அவ்வகையில் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் 800 திரைப்படம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் நடிகர்களின் சுதந்திரத்தை யாரும் தடுக்கக்கூடாது. அவ்வாறு தடுத்தால் அது தடுப்பவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு. அவர்களுக்கு பிடித்தமான கதாபாத்திரத்தில் நடிகர்கள் நடிக்கலாம் என தெரிவித்துள்ளார்.