Categories
தேசிய செய்திகள்

800 பேர் வசித்து வந்த கிராமத்தில் 50 பேர் இறப்பு…. காரணம் என்னவாக இருக்கும்?…. அச்சத்தில் தவிக்கும் மக்கள்….!!!!

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் மொத்தம் இருந்த 800 நபர்களில் 50 பேர் காரணமே தெரியாமல் உயிரிழந்திருப்பது அப்பகுதியினர் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அனைவரும் ஒரேநாளில் இறந்துவிடவில்லை. ஆனால் கடந்த 6 மாதங்களில் மட்டும் இந்த கிராமத்தைச் சேர்ந்த 61 பேர் இறந்து விட்டதாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகிறது. எனினும் கிராம நிர்வாகமோ, கடந்த 2 வருடங்களில் சுமார் 50 -52 பேர் இறந்திருப்பதாகக் கூறுகிறது. இருந்தாலும் 800 பேர் கொண்ட கிராமத்தில் 50 பேர் காரணமே தெரியாமல் பலியாகி இருப்பதுதான் அதிர்ச்சியாகவுள்ளது.

அவ்வாறு மரணமடைந்த பலருக்கும் கால்களில் வீக்கம், மயக்கம் ஆகியவை ஏற்பட்டிருந்தது. இதனால் சுகாதாரத்துறையினர் உண்மையைக் கண்டறியும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள். இப்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. மற்றொருபுறம் கிராமத்தின் மண் மற்றும் குடிநீர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. மழைக்காலம் துவங்கிவிட்டால், இந்த கிராமங்களைத் தொடர்புகொள்வது சிரமம் ஆகும். அதனால் தான் இத்தகவல் வெளியே தெரியாமல் இருந்துள்ளது.

தற்போது உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டதால் விசாரணை தொடங்கி இருக்கிறது என்று மாவட்ட நிர்வாகிகள் கூறினர். அதனை தொடர்ந்து சுக்மா மாவட்ட ஆட்சியர் ஹரீஸ் கூறியிருப்பதாவது “இந்த மரணங்களுக்குப் பின்னால் குடிநீர் தான் காரணமாக உள்ளதாகவும் இந்த பகுதியில் கிடைக்கும் குடிநீரில் அனுமதிக்கப்படும் அளவைவிட அதிகமாக ப்ளோரைடு இருப்பதாகவும், அதிக இரும்புச் சத்து இருப்பதாகவும் கண்டறியப்பட்டு இருக்கிறது. இப்போது 41 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சில பேருக்கு சிறுநீரக பாதிப்புள்ளது தெரியவந்திருப்பதாகவும்” அவர் கூறுகிறார்.

Categories

Tech |