நாம் சாதாரணமாக கடையில் வாங்கிய ஒரு மோதிரம் உண்மையான வைர மோதிரமாக இருந்தால் எப்படி இருக்கும். இப்படி ஒரு சம்பவம் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்மணியின் வாழ்க்கையில் நடந்துள்ளது. அதாவது ஒரு 55 வயது பெண்மணி கடந்த 35 வருடங்களுக்கு முன்பாக ஒரு கடையில் ரூபாய் 800 கொடுத்து ஒரு மோதிரத்தை வாங்கியுள்ளார். இந்நிலையில் சிறிது நாட்களுக்கு முன்னர் அந்த மோதிரத்தை ஒருவர் திருட முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்தப் பெண் அந்த திருடனை பார்த்ததால் அவரிடம் இருந்து போராடி மோதிரத்தை மீட்டு திருடனிடம் இருந்து தப்பித்து விட்டார். அந்தப் பெண்மணி கடன் பிரச்சினையால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார்.
அப்போது திடீரென ஒரு திருடன் தன்னிடம் இருந்த 800 ரூபாய் மோதிரத்தை திருட முயற்சி செய்தது ஞாபகம் வந்துள்ளது. அந்த பெண் அந்த மோதிரத்தை எடுத்து ஒரு கடையில் கொடுத்து அது பற்றி கேட்டுள்ளார். அப்போதுதான் அது ஒரு சாதாரண மோதிரம் இல்லை என்பதும், அது ஒரு விலை உயர்ந்த அரிய வகை கல் பதித்த மோதிரம் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த பெண் மோதிரத்தை ஏலத்தில் விட்டு நிறைய பணம் சம்பாதித்துள்ளார். மேலும் 35 வருடங்களுக்கு முன்பாக 800 ரூபாய்க்கு கொடுத்து வாங்கிய ஒரு மோதிரத்தால் திடீரென அந்தப் பெண் ஒரே நாளில் கோடீஸ்வரியாக மாறிவிட்டார்.