Categories
மாநில செய்திகள்

800 வார்த்தைகள்…. “உலக சாதனை படைத்த தமிழக யுகேஜி சிறுவன்”….. குவியும் வாழ்த்துக்கள்….!!!

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த யுகேஜி படிக்கும் சிறுவன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சம்பவம் வைரலாகி வருகின்றது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சண்முகபுரம் பகுதியை சேர்ந்த சரவணன்- மனோன்மணி என்பவரின் மகன் கே எம் தக்ஷன். வாலரை கேட் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் யுகேஜி படித்து வருகிறார். தற்போது ஆங்கிலத்தில் 26 எழுத்துக்களிலும் தலா 10 க்கும் மேற்பட்ட வார்த்தைகளையும், தமிழ் உயிர் எழுத்துக்கள், உயிர்மெய் எழுத்துக்கள் அடங்கிய 173 சொற்கள், 100 பழங்களின் பெயர்கள், 40 வாகனங்களின் பெயர்கள், உடல் பாகங்கள், காய்கறிகள் என 800 வார்த்தைகளை தெரிந்து வைத்துள்ளார்.

இதுதவிர கராத்தே மற்றும் ஸ்கேட்டிங் பயின்று வருகிறார்.  இவரது சாதனையை யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரிக்கார்ட்ஸ் புத்தகத்தில் ரெக்டி மோஸ்ட் டாப்பிக்ஸ் நேம் அன்டு ஆப்ஜக்ட்ஸ் என்ற பட்டியலில் இடம் பிடித்துள்ளார். பியூட்சர் கலாம் புக் ஆப் ரிகார்டிலும் இவரது சாதனை பதிவு செய்யப்பட்டு சான்றுகள், பதக்கங்கள், அங்கீகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இவர் குறித்து அவரது தாய் மனோன்மணி தெரிவித்துள்ளதாவது “ஆங்கில எழுத்தில் ஏ என்றால் ஏ பார் ஆப்பிள் என்று 12 வார்த்தைகளை அறிந்து வைத்திருப்போம். ஆனால் எனது மகன் ஏ என்ற எழுத்தில் பத்து வார்த்தைகள் என ஏ முதல் இசட் வரை உள்ள 26 எழுத்துக்களில் 260 வார்த்தைகளை வாசிப்பான். அதேபோன்று தமிழில் பழங்கள், பறவைகள் ,காட்டு விலங்குகள், பூச்சிகளின் பெயர் தெரிந்து வைத்துள்ளான். விண்வெளி துறை சம்பந்தமாக தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வம் உள்ளது. சாதனை குறித்து செய்திகளை பார்த்த எனது மகன், தானும் இத போல் மெடல்கள் வாங்க வேண்டும் என கூறியதை அடுத்து, அவரை நெறிப்படுத்தி வழிகாட்டுதல் செய்து மற்றவர்கள் சாதனையை முறியடித்து வந்தால் தான் இது போல் மெடல் வாங்க முடியும், என ஊக்குவித்து வழிகாட்டினோம்”  என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |