Categories
உலக செய்திகள்

800 மாணவர்களின் சடலங்கள் கண்டுபிடிப்பு.. கனடாவில் பரபரப்பு..!!

கனடாவில், பூர்வகுடியின மாணவர்களின் பள்ளியில் நூற்றுக்கணக்கில் சிறுவர்களின் சடலங்கள் கண்டறியப்பட்டு வரும் சம்பவம் நாடு நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.  

பிரிட்டிஷ் கொலம்பியாவில் இருக்கும் பூர்வ குடியினர் மாணவர்களுக்கான பள்ளியான Kamloops-ல் அமைந்துள்ள பகுதியில் ரேடார் உதவியுடன் சோதனை செய்யப்பட்டது. அப்போது சுமார் 215 மாணவ-மாணவிகளின் உடல்கள் புதைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. Jackie Bromley(70) என்ற நபர் இந்த தகவலை அறிந்தவுடன் தெற்கு ஆல்பர்ட்டாவில் இருக்கும் St. Mary’s என்ற பூர்வகுடியின பள்ளி தான் தனக்கு ஞாபகம் வருவதாக தெரிவித்துள்ளார்.

அதாவது அவர் பத்து வயது சிறுவனாக இருந்தபோது, அவருடன் பயின்ற சக மாணவர்கள் அப்பள்ளியின் பின்பகுதியில் இருக்கும் கல்லறை குறித்து பேசியதாகவும், தான் அங்கு சென்று பார்த்தபோது, வழக்கமான கல்லறை போன்று அது இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார். அதாவது கடந்த 1945 ஆம் வருடத்தில், ஒரு இந்திய ஏஜண்ட் அந்த பள்ளியின் முதல்வருக்கு எழுதிய கடிதத்தில், அந்த கல்லறையில் சடலங்கள் மேற்பகுதியில் புதைக்கப்பட்டுள்ளது.

எனவே அவற்றை தோண்டியெடுத்து மீண்டும் ஆழமாகப்பள்ளம் தோண்டி புதைக்க கோரியுள்ளார். இந்நிலையில் Kisha Supernant என்ற புதைபொருள் ஆராய்ச்சியாளர், பூர்வகுடியின மக்கள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இவர் கல்லறைக்கு எந்த சேதமுமின்றி ரேடார் உதவியுடன் உடல்கள் எத்தனை புதைக்கப்பட்டிருக்கின்றன என்பதற்கான ஆராய்ச்சியை செய்து வருகிறார்.

அதன்படி, கடந்த 1870 முதல் 1990 வரை பூர்வகுடியின பள்ளியில் சுமார் 4100 மாணவ, மாணவிகள்  உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சரியான எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் ஆல்பர்ட்டாவில் சுமார் 821 மாணவ மாணவியர்  உயிரிழந்திருக்கிறார்கள். தற்போது கனடாவில் தொடர்ந்து பூர்வகுடியின மாணவர்களின்  பள்ளிகளில் நூற்றுக்கணக்கில் குழந்தைகளின் உடல்கள் கண்டறியப்பட்டு வருகிறது.

Categories

Tech |