Categories
உலக செய்திகள்

800 மில்லியன் முகக்கவசங்கள்…. தீயிலிட்டு எரிக்க தயாராக உள்ள பிரபல நாடு….!!!!

பயன்படுத்தப்படாத 800 மில்லியன் முக கவசங்களை தீயிலிட்டு எரிக்க டெண்டர்கள் விடப்பட்டுள்ளது.

ஜெர்மனி நாடு கொரோனா நோய் தொற்றின் தொடக்க காலத்தில் முக கவசங்கள் வாங்குவதற்கு ஆறு மில்லியன் யூரோ செலவிட்டுள்ளது. இதில் கிட்டத்தட்ட 800 மில்லியன் பயன்படுத்தப்படாத முகவரியங்களை எரிப்பதற்கு ஜெர்மனி நாடு தயாராக இருக்கின்றது. ஏனெனில் பயன்படுத்தபடாத முக கவசங்கள் காலாவதியாகிவிட்டதே காரணம் எனக் கூறப்படுகிறது. சுமார் 730 மில்லியன் அறுவை சிகிச்சை முகக் கவசங்கள் மற்றும் 60 மில்லியன் ffp2 காலாவதியான முக கவசங்களை தீயில் இட்டு எரிப்பதற்கு நிறுவனங்களுக்கு டெண்டர்கள் வழங்கப்பட்டுள்ளது என்று அந்நாட்டின் ஆரம் சுகாதார அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் மார்ச் 2020 ஆம் ஆண்டு வாங்கப்பட்ட சுமார் 20 சதவீத முக கவசங்கள் தரக்குறைபாடுகளை கொண்டதாகவும் உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் முன்னாள் சுகாதார அமைச்சர் ஜெயின் ஸ்பான் அதிகப்படியான முக கவசங்களை வாங்க தனிப்பட்ட தொடர்புகளை பயன்படுத்தியதற்காக விமர்சிக்கப்பட்டார். பின்னர் அவர் பொது விநியோகத்திற்கு முக கவசங்கள் பற்றாக்குறை மற்றும் பாதுகாப்பு உறைகளை விரைவாக பெறுவதற்கான சிக்கல்களை காரணம் காட்டி அந்த நடவடிக்கைகள் சரியானது தான் என நியாயப்படுத்தியும் காட்டியுள்ளார்.

Categories

Tech |