வியாழனும் சனியும் இணையும் அந்த நாளன்று நீண்ட இரவாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
2020 ஆம் வருடத்தின் இறுதியில் வானத்தில் ஒரு அதிசயம் நிகழப் போகிறது என்றும், நவ கிரகங்களில் மிகப்பெரிய கிரகம் வியாழன் மற்றும் சனி டிசம்பர் 21ஆம் தேதி நெருங்குகின்றன. இணையும் அந்த நாளில் வானில் தோன்றும் அதிசய நட்சத்திரத்தை கிறிஸ்துமஸ் நட்சத்திரம் என்று கூறுகின்றனர். ஜோதிடப்படி இப்போது சனியும், குருவும் மகர ராசியில் இணைந்திருக்கின்றன. இந்த நிகழ்வானது 800 வருடங்களுக்குப் பிறகு நிகழ்வதால் வானியல் ஆய்வாளர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். அன்றைய நாள் இரவு நீண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
மேலும் 21ஆம் தேதி தெளிவான வானிலை இருந்தால் இந்த கிறிஸ்துமஸ் நட்சத்திரத்தை உலகில் எந்த பக்கத்திலிருந்தும் காணலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 21 தேதியன்று இரவே அந்த நட்சத்திரத்தை காண முடியும் என்றும் கூறியுள்ளனர். உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் டெலஸ்க்கோப் மற்றும் பைனாகுலர் மூலம் பார்க்கலாம் என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அதேவேளை அன்றைய தினம் நீண்ட இரவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.