நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 8 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் காலி இடங்களை பற்றி தெரிந்துகொள்வதற்கு சட்ட கல்லூரி மாணவரும் சமூக செயல்பாட்டாளருமான அனிகேத் கவுரவ் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் விவரம் கேட்டு இருந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட விவரத்தில் பள்ளி தெரிவித்துள்ளதாவது: நாடு முழுவதும் 1,248 கேந்திர வித்யாலயா பள்ளிகள் இருப்பதாகவும், அதில் 13.9 லட்சம் மாணவர்கள் படிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த பள்ளிகளில் டிசம்பர் 2020 கணக்கீட்டின்படி சுமார் 8000 காலிப்பணியிடங்கள் உள்ளது. இது மொத்த பணியிடங்களில் 17 சதவீதம் ஆகும். கற்பித்தல் அல்லாத பணியிடங்களில் 47 சதவீதம் காலியாக உள்ளதாக தெரிவித்து இருந்தனர். இந்த தகவல் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.